கடந்த சில மாதங்களாக தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து இருந்தாலும் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் மட்டும் குறையாமல் அதிகரித்துக்கொண்டே வந்தது. தற்போது மீண்டும் அனைத்து மாநிலங்களிலும் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் மிகவும் அதிகமாகி வருகிறது என்பதும் தினமும் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கி இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று பிரதமருடன் ஆலோசனை நடத்திவிட்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது
ஏற்கனவே நாக்பூர், புனே ஆகிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் சில நேரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று கூறப்படுகிறது குறிப்பாக கொரோனா வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்றும் முகக் கவசம் அணிதல் தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை பொதுமக்கள் ஒழுங்காக கடைபிடிக்கவில்லை என்றும் மகாராஷ்டிர மாநில அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது