அதிகரிக்கும் கொரோனா பரவல்: முதலமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை!

புதன், 17 மார்ச் 2021 (06:59 IST)
அதிகரிக்கும் கொரோனா பரவல்: முதலமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை!
தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்
 
இன்று காலை 11 மணி அளவில் காணொளி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் அவர் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்படும் 
 
ஒருசில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது, கொரோனா தடுப்பூசியை அதிகமாக பொதுமக்களுக்கு வழங்குவது உள்ளிட்ட ஆலோசனை இன்று நடத்தப்படும் என தெரிகிறது. மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஒரு சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து மேலும் சில நகரங்களுக்கு அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்