ஆன்லைனில் வாங்கிய லாட்டரிக்கு ரூ.44 கோடி பரிசு.. பெங்களூரு நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (16:26 IST)
ஆன்லைனில் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 44 கோடி பரிசு விழுந்ததை அடுத்து பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளார். பெங்களூரை சேர்ந்த அருண்குமார் என்பவர் ஆன்லைன் மூலம் வளைகுடா நாடான அபுதாபியில் விற்பனை செய்யப்படும் லாட்டரி சீட்டை ஆன்லைன் மூலம் வாங்கினார். 
 
இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி குலுக்கல் நடைபெற்ற போது அதில் முதல் பரிசான 20 மில்லியன் திர்ஹாம் அதாவது இந்திய மதிப்பில் 44 கோடி ரூபாய் பரிசு அருண்குமாருக்கு கிடைத்தது. இதனிடம் அவரிடம் தெரிவிப்பதற்காக லாட்டரி நிறுவனம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது ஆன்லைன் மோசடி நிறுவனமாக இருக்கும் என்று நினைத்து அந்த எண்ணை அவர் பிளாக் செய்துவிட்டார். 
 
அதன்பின்னர் அவரை வேறொரு எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு பரிசு கிடைத்திருப்பது உண்மைதான் என்றும் நேரடியாகவோ அல்லது வங்கி மூலமாகவோ அந்த பரிசு பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இதனை அடுத்து அருண்குமார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்