இந்தியாவின் முதல் 'ஆப்பிள்' ரிடெய்ல் ஸ்டோர்: புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பு..!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (16:19 IST)
இந்தியாவின் முதல் ஆப்பிள் ரிடெய்ல் ஸ்டோரை மும்பையில் தொடங்க இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் மற்றும் இதர எலக்ட்ரானிக் பொருட்கள் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு பெரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உலகின் பல நாடுகளில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என பிரத்யேக ஷோ ரூம் இருந்து வரும் நிலையில் இந்தியாவில் முதல் முறையாக மும்பையில் ஆப்பிள் ரீடைல் ஸ்டோர் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அடுத்த மாதம் இந்தியாவில் தனது முதல் நேரடி விற்பனை நிலையத்தை திறக்கப் போவதாக அறிவித்துள்ள ஆப்பிள் நிறுவனம் மும்பையில் திறக்கப்பட உள்ள ரீடைல் ஸ்டோரின் வெளித்தோற்றத்தை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது.
 
இந்தியாவில் முதல் முறையாக ஆப்பிள் ரிடெய்ல் ஸ்டோர் திறக்க இருப்பதை அடுத்து இந்திய ஆப்பிள் பயனாளர்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்