ஆதவ் அர்ஜூனாவிடம் ஏதோ ஒரு செயல்திட்டம் இருக்கிறது: திருமாவளவன் பேட்டி

Siva

ஞாயிறு, 15 டிசம்பர் 2024 (13:32 IST)
கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னரும், சர்ச்சை குறைய வகையில் ஆதவ் அர்ஜூனா பேசுவதால், அவரிடம் ஏதோ ஒரு செயல் திட்டம் இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 
விஜய் கலந்து கொண்ட அம்பேத்கர் புத்தக விழாவில் கலந்துகொண்ட ஆதவ் அர்ஜூனா, சர்ச்சைக்குரிய வகையில் விசிகவையும் திருமாவளவனையும் விமர்சனம் செய்ததை அடுத்து,  ஆறு மாத காலத்திற்கு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 
 
இந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதர்கு பின்னரும் திருமாவளவன் குறித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் ஆதவ் அர்ஜூனா ஊடகங்களில் பேட்டியளித்து வருவது குறித்து திருமாவளவன் கூறிய போது, “அவர் ஆறு மாத காலத்திற்கு அமைதியாக இருந்தால் மட்டுமே இந்த இயக்கத்தில் மீண்டும் அவரால் இணைந்து செயல்பட முடியும். ஆனால், அவர் சர்ச்சைக்குரிய வகையில் மீண்டும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருவது மேலும் சிக்கலைத் தான் உண்டாக்கும். அவரது மனதில் ஏதோ ஒரு செயல் திட்டம் இருக்கிறது என்று கூறினார் 
 
மேலும், “என்னை யாராலும் அழுத்தம் கொடுத்து கட்டுப்படுத்த முடியாது, புத்தக விழாவுக்கு செல்லாதது என்னுடைய சொந்த முடிவு,” என்று அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்