நடிகை ரோஜாவை எதிர்த்து போட்டியிடுகிறாரா அனுஷ்கா ஷெட்டி? ஆந்திர அரசியலில் பரபரப்பு..!

Siva
வியாழன், 28 மார்ச் 2024 (13:34 IST)
நடிகை ரோஜாவை எதிர்த்து நகரி தொகுதியில் நடிகை அனுஷ்கா ஷெட்டி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் மட்டும் இன்றி சட்டமன்ற தேர்தலும் நடைபெறுவதால் அங்கு அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றன. 
 
இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகரி தொகுதியில் நடிகை ரோஜா மீண்டும் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இம்முறை நடிகை ரோஜாவுக்கு எதிராக நடிகை அனுஷ்கா ஷெட்டியை களம் இறக்க பவன் கல்யாண் கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அனுஷ்கா ஷெட்டி இடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே பவன் கல்யாண் கட்சி  மற்றும் பாரதிய ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியில் கூட்டணியாக இருப்பதால் அந்த கூட்டணி வலுவாக உள்ளது. ரோஜாவை எதிர்த்து அனுஷ்காஷெட்டி போட்டியிட்டால் அவர் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்