பம்பரம் சின்னம் இல்லை.! சுயேட்சை சின்னத்தில் போட்டி.! துரை வைகோ..!!

Senthil Velan

புதன், 27 மார்ச் 2024 (17:38 IST)
மக்களவை தேர்தலில் சுயேட்சை சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
 
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மதிமுக சார்பில் திருச்சி தொகுதியில் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிய மதிமுகவின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றமும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
 
இந்நிலையில் பம்பரம் சின்னம் கோரி உச்சநீதிமன்றம் செல்லப் போவதில்லை என்று மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மக்களவை தேர்தலில் சுயேட்சை சின்னத்திலேயே போட்டியிட உள்ளேன் என்று கூறினார்.  

ALSO READ: மூளையில் அறுவை சிகிச்சை..! மருத்துவமனையில் இருந்து சத்குரு டிஸ்சார்ஜ்..!
 
மக்கள் வேட்பாளர்களைத்தான் பார்ப்பார்கள் என்றும் அந்த வகையில் என்னை வெற்றிச் பெற செய்வார்கள் என்றும் ம.தி.மு.க வலுப்பெற்று மீண்டும் பம்பரம் சின்னத்தை மீட்டெடுப்போம் என்றும் துரைவைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்