இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு.. பெட்ரோல் விலை உயருமா?

Siva
புதன், 2 அக்டோபர் 2024 (18:17 IST)
இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையேயான பதட்டம் அதிகரிக்கும் நிலையில், ஒரே நாளில் கச்சா எண்ணெய் 3 சதவீதம் உயர்ந்ததாக தகவல்கள் வருகின்றன. போர் நீடிக்கும் பட்சத்தில் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்தியா உள்பட உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் பதட்டம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திய பிறகு, மேற்கத்திய நாடுகளில் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், இந்த போர் தொடர்ந்து நீடித்தால் வருங்காலங்களில் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் மாற்றமில்லை. எனவே, போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை குறைந்த போது பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்கப்படாததால், தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதிலும், விலையை உயர்த்தக்கூடாது என பொதுமக்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்