உன்னவ் பகுதியில் மீண்டும் ஒரு பலாத்காரம்

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (19:41 IST)
உத்திரபிரதேச மாநிலம் உன்னத் பகுதியில் சமீபத்தில் பாஜக எம்எல்ஏ 17 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, இது குறித்து புகார் அளித்த காரணத்திற்காக அந்த பெண்ணை தந்தையை கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பின்னர் அந்த பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இதன் பரபரப்பு அடங்காத நிலையில், மீண்டும் ஒரு பாலியல் பலாத்காரம் நடந்துள்ளது. 
 
சண்டீகரில் 14 வயது சிறுமியும் அவரது பெற்றோரும் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் சொந்த ஊரான உன்னவ் பகுதியில் இந்த சிறுமி ஒரு மாதத்துக்கு மேல் தங்கியிருந்தார்.
 
அப்போது, அவரது உறவுக்காரர் ஒருவர் பலாத்காரம் சிறுமியை செய்துள்ளார். இதனால் அந்த சிறுமிக்கு அடிவயிற்றில் வலி ஏற்பட்டது. பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரது அழைத்து சென்ற போது சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளது தெரியவந்தது. 
 
இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் போலீஸுக்கு புகார் அளித்தனர். அதன்பேரில் அந்த நபரை தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்