காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்ற தந்தையை சுட்டுக் கொன்ற மகள்

செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (12:03 IST)
உத்திர பிரதேசத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, அவரது மகளே சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பெரும்பாடு பட்டு வளர்க்கின்றனர். அதுவும் இந்த காலக்கட்டத்தில், விற்கும் விலைவாசிக்கு, பெற்றோர் தங்களது குழந்தைகளை படிக்க வைப்பதற்கும், குடும்பத்தை பராமரிப்பதற்கும் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஆனால் இதனை சற்றும் புரிந்து கொள்ளாத சில பிள்ளைகள் காதல் என்ற பெயரில் பெற்றோர்களை பெரிதும் சிரமப்படுத்துகின்றனர். 
 
உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் ரோகேலா. இவருக்கு ராகேஷிற்கு காவ்யா(23) என்னும் மகள் உள்ளார். காவ்யா, சமீர் அகமத் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் ராகேஷிற்கு தெரியவே, அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவ்யா, தந்தை என்றும் பாராமல் தனது காதலனோடு சேர்ந்து தந்தையை கொல்ல திட்டமிட்டுள்ளார்.
இதனையடுத்து வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய ராகேஷை, அவரது மகள் காவ்யா மற்றும் காதலர் சமீர் அகமத் இணைந்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காவ்யா, சமீர் அகமத் ஆகியோரை கைது செய்தனர். காதலுக்காக தன்னை கஷ்டப்பட்டு வளர்த்த தந்தையை, மனசாட்சி இல்லாமல் அவரது மகளே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்