எனக்கு கூறிய அறிவுரைகளை மோடி பின்பற்ற வேண்டும்; மன்மோகன் சிங்

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (19:21 IST)
நான் பிரதமராக இருந்த போது மோடி எனக்கு கூறிய அறிவுரைகளை தற்போது அவர் பின்பற்ற வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

 
பெண்கள் மற்றும் குழந்தை மீதான தாக்குதல் இந்தியாவில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதில் பெரும்பாலும் பாஜகவை சேர்ந்தவர்கள் சிக்கி வருகின்றனர். இதனால் பிரதமர் மோடி மீதான் விமர்சனம் அதிகரித்து வருகிறது.
 
இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
இந்தியாவில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தவறு செய்தாலும் தண்டனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள்.
 
இதுபோன்ற சமயங்களில் உயர் பதவியில் இருப்பவர்கள் சரியான நேரத்தில் உண்மைகளைப் பேசி சமூகத்தை வழிநடத்த வேண்டியது அவசியம். அப்போதுதான் மக்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வார்கள். இதை விடுத்து அமைதியாக இருப்பதன் மூலம் நாட்டில் குழப்பங்களே விளையும்.
 
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நான் பிரதமராக இருந்தபோது எனக்கு கூறிய அறிவுரைகளை மோடி இப்போது பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்