கொரோனா சிகிச்சையில் ராணுவம் உதவ வேண்டும்… ராஜ்நாத் சிங் கோரிக்கை!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (08:27 IST)
கொரோனா இரண்டாவது அலையை சமாளிப்பதற்கு மாநில அரசுகளுக்கு இந்திய ராணுவம் உதவ வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. தினசரி எண்ணிக்கை 3 லட்சத்தை தொட்டுள்ளது. இதனால் மாநில அரசுகள் ஆக்ஸிஜன் சிலிண்டர் போதாமை, மருத்துவ உபகரணங்கள் மற்றும் போதிய படுக்கை வசதிகள் இல்லாமல் தடுமாறுகின்றனர். இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘மாநில அரசுகளுக்கு கொரோனா சிகிச்சையில் இந்திய ராணுவம் உதவ வேண்டும். அவர்களிடம் இருக்கும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றைக் கொடுத்த உதவ வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்