13,521 ஊழியர்கள் அதிரடி நீக்கம்: வேலையை காட்டும் ரயில்வே...

Webdunia
சனி, 10 பிப்ரவரி 2018 (11:44 IST)
மத்திய ரயில்வே துறையில் நாடு முழுவதுமாக சுமார் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பலர் சட்டவிரோதமாக விடுப்பு எடுத்ததுடன் அதற்கான ஊதியங்களையும் பெற்று வந்துள்ளனர். 
 
இந்த விவகாரம் குறித்து ரயிவே சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. இதுபோன்ற ஊழியர்களை கணக்கு எடுப்பு நடத்தி அடையாளம் காணும்படி மத்திய ரயில் துறை மற்றும் நிலக்கரி துறையின் அமைச்சரான பியூஷ் கோயல் உத்தரவிட்டிருந்தார்.
 
இதன் பெயரில், சுமார் 13,000 பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டு விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்