’யெஸ் பேங்க் இனி நோ பேங்க்’ ராகுல்காந்தியின் கலாய்ப்பு டுவீட்

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2020 (17:30 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் பொருளாதார மந்த நிலையில் இருப்பதாகவும் குறிப்பாக வங்கிகள் மிகவும் நிதி நெருக்கடியில் த கழித்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் யெஸ் வங்கி வாராக் கடன்கள் காரணமாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதால் இந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது 
 
மேலும் யெஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது என்றும் அதுவும் திருமணம் மருத்துவச் செலவு உள்ளிட்ட செலவுகளுக்கு மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால் யெஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இந்த நிலையில் சற்று முன்னர் பேட்டியளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் யெஸ் வங்கியின் வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு பணமும் பாதுகாப்பாக இருப்பதாகவும் இது குறித்து வாடிக்கையாளர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்
 
இந்த நிலையில் யெஸ் வாங்கி நிதி நெருக்கடி குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் ’யெஸ் வங்கி இனி நோ வங்கி’ எனக் கலாய்த்துள்ளார். பிரதமர் மோடியும் அவரது அடியாட்களும் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ராகுல்காந்தியின் இந்த டுவீட் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்