ஜூன் 4ஆம் தேதிக்கு பின் ராகுல் காந்தி ஒரு யாத்திரைக்கு செல்வார்.. அமித்ஷா கிண்டல்..!

Siva
செவ்வாய், 21 மே 2024 (07:34 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஜூன் 4ஆம் தேதிக்கு பின்னர் மீண்டும் ஒரு யாத்திரையை தொடங்குவார் என்றும் அந்த யாத்திரை காங்கிரஸ் கட்சியை கண்டுபிடிக்கும் யாத்திரையாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கேலியுடன் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இரண்டு யாத்திரைகள் இந்தியா முழுவதும் சென்றார் என்பதும் ஒன்று கன்னியாகுமரி முதல் ஜம்மு காஷ்மீர் வரை, மற்றொன்று மணிப்பூர் முதல் மும்பை வரை சென்றார் என்பதும் அவரது யாத்திரைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ஹரியானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு காங்கிரஸ் கட்சியை கண்டுபிடிக்கும் யாத்திரையை இளவரசர் மேற்கொள்வார் என்றும் பைனாக்குலர் மூலம் கூட காங்கிரஸ் கட்சியை அவரால் காண முடியாது என்றும் அவர் தெரிவித்தார்

மேலும் முதல் கட்ட 5 வாக்குப்பதிவிலேயே பிரதமர் மோடியின் தலைமையில் கீழ் 270 இடங்களுக்கு மேல் மெஜாரிட்டி கிடைத்துவிட்டது என்றும் மீதமுள்ள தேர்தல் முடியும் முன்பே பாஜகவின் எண்ணிக்கை 400 இடங்களை கடந்து விடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்
ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்த இளவரசர் ராகுல் காந்தி, வறுமை ஏழை குடும்பத்தில் பிரதமர் பிறந்த பிரதமர் மோடி இதில் யார் வேண்டும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றும் அமைச்சர் அமித்ஷா பேசினார்.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்