டெல்லியின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக டெல்லி சாந்தினி சௌக் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல், டெல்லியில் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு தாம் வாக்களிப்பதாகவும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிப்பார் என்றும் தெரிவித்தார்.