ஏழைகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்… ஊரடங்கு குறித்து ராகுல் கருத்து!

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (16:01 IST)
இந்தியாவில் கொரோனாவால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு என்பது ஏழைகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் ராகுல்காந்தி டிவிட் செய்துள்ளது.

பல பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 23.9 சதவிகிதம் என்ற அளவில் சுருங்கியுள்ளது. இதற்காக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசை கடுமையாக பொது வெளியிலும், சமூக ஊடகங்களிலும் விமர்சித்து வருகின்றனர். ராகுல் காந்தியும் இன்று காலை அவ்வாறு ஒரு ட்விட்டர் பதிவை பகிர்ந்திருக்கிறார்.

அதில் ‘இந்தியாவில் ஊரடங்கு என்பது கொரோனாவுக்கு எதிரான தாக்குதல் அல்ல. அது ஏழைகளின் மீதான தாக்குதல். அமைப்பு சாரா தொழிலாளர்கள் மேல் நடத்தப்பட்ட தாக்குதல். இதனால் தான் பொருளாதாரம் சரிந்துள்ளது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்