திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 19ஆம் தேதிமுதல் 27 ஆம் தேதிவரை பிரமோஸ்சவம் நடைபெறவுள்ளது. இதையொட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் வரும் 15 ஆம் தேதியிலிருந்து 18 ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.
எனவே, கோவில் நிர்வாகம் வரும் 30 ஆம் தேதி வரை ரூ. 300 கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருந்த நிலையில், ரூ.300 கட்டண தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கபடுவார்கள் என்றும், ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.
நேற்று முன தினம் ஒரேநாளில் 1 கோடியே 16 லட்சம் ரூபா உண்டியல் மூலம் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.