மாணவனை மதரீதியில் திட்டிய ஆசிரியர் -ராகுல் காந்தி கண்டனம்

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2023 (14:01 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள ஒரு பள்ளியில், திரபதி தியாகி என்ற ஆசிரியர் 2 ஆம் வகுப்பு மாணவரிடம் வாய்ப்பாடு கூறச் சொல்கிறார். சிறுவன் அதை சரியாக கூறவில்லை. அப்போது, வகுப்பில் இருந்த சக மாணவனை அழைத்து, அந்த சிறுவனை அறையச் சொல்கிறார்.

உடனே சிறுவன் அழுகும்போது, அவரது மதத்தின் பெயரைக் குறிப்பிட்டு, ''அந்த மதத்தைச் சேர்ந்த பெண்கள், தங்கள் குழந்தைகளின் கல்வியில் அக்கறை செலுத்தாததால்தான் அந்த சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் கல்வியில் பின் தங்கியுள்ளதாக ''கூறினார்.

இந்த வீடியோ இணையதளத்தில் பரவலாகி வரும் நிலையில், இதற்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கண்டித்துள்ளார்.

இதுபற்றி அவர் தன் சமூக வலைதள பக்கத்தில்,  ஒரு ஆசிரியர் குழந்தைகளின் மனதில் பிரிவினைவாதம் என்ற விசத்தை விதைக்கக் கூடாது. செய்யக் கூடாத செயல் இது; இந்தியாவின் எதிர்காலம் குழந்தைகள்தான். அவர்களை வெறுக்காதீர்கள்.... குழந்தைகளுக்கு நாம் அன்பை போதிக்க வேண்டும் ‘’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்