நீட் தேர்வு போலவே எஸ்.ஐ தேர்விலும் கெடுபிடி.. மாணவிகள் தலையில் இருந்த பூக்களை அகற்றிய அதிகாரிகள்..!

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2023 (12:47 IST)
நீட் தேர்வில் பல்வேறு கெடுபிடிகள் மாணவ மாணவிகளுக்கு இருக்கும் என்பதும் இது குறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இன்று எஸ்ஐ தேர்வு தமிழக முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் இதிலும் சில கெடுபிடிகள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
 
குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் தேர்வு எழுத வந்த மாணவிகளின் தலையில் இருந்த பூக்களை அதிகாரிகள் அகற்ற சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த வாக்குவாதம் எழுந்தாலும் கடைசியில் மாணவிகள் வேறு வழியின்றி பூக்களை அகற்றிய காட்சிகள் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 621 காவல் உதவி ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கு தேர்வுகள் எந்தவித பிரச்சனையும் இன்றை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்