பிரதமரே முதலில் கண்ணாடியை கழட்டுங்கள்: ராகுல்காந்தி ஆவேசம்

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (15:19 IST)
பிரதமரே முதலில் கண்ணாடியை கழட்டுங்கள்: ராகுல்காந்தி ஆவேசம்
பிரதமர் மோடி தனது கண்ணாடியை கழட்டி விட்டு பார்க்க வேண்டும் என ராகுல் காந்தி ஆவேசமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசும் பிரதமர் மோடியும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என காங்கிரஸ் கட்சி கடந்த சில மாதங்களாகவே குற்றம்சாட்டி வருகிறது
 
இந்த நிலையில் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி தனது இளஞ்சிவப்பு நிற கண்ணாடியை எடுத்து விட்டு பார்க்க வேண்டும் என்றும் அப்போது தான் புதிய நாடாளுமன்ற கட்டிடம் தவிர மற்ற காட்சிகளும் கண்களுக்கு புலப்படும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் 
 
நதிகளில் எண்ணற்ற மனித உடல்கள் அடித்துச் செல்லப்படுகிறது, மருத்துவமனைகளில் மணிக்கணக்கில் வரிசையில் நீண்டுள்ளது வாழ்க்கை பாதுகாப்புக்கான உரிமை பறிக்கப்பட்டுள்ளது, இந்தநிலையில் பிரதமர் தனது இளஞ்சிவப்பு கண்ணாடியை அணிந்து கொண்டு விஸ்டாவை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் அந்த கண்ணாடியை கழட்டினல்தான் மற்ற காட்சிகளும் அவருக்கு புலப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்