முதல்முறையாக பாஜகவிலிருந்து 4 எம்.எல்.ஏக்கள்! – பிரதமர் மோடி தமிழில் நன்றி!

திங்கள், 3 மே 2021 (08:56 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக 4 இடங்களில் வெற்றிபெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி நன்றி தெரிவித்து தமிழில் பதிவிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் திமுக 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க உள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வென்று தோல்வியை தழுவியது. எனினும் கூட்டணி கட்சியான பாஜக 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வென்றுள்ளது. 25 வருடங்களில் பாஜக எம்.எல்.ஏக்கள் முதன்முறையாக சட்டசபை செல்ல உள்ளனர்.

இந்நிலையில் தமிழக தேர்தல் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மாநில நலனுக்காகவும் பெருமைமிகு தமிழ் பண்பாட்டை மென்மேலும் பறைசாற்றவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழக மக்களுக்கு உறுதியளிக்கிறேன். கடினமாக உழைத்த நமது தொண்டர்களைப் பாராட்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்