பயிற்சியின் போது வெடித்த குண்டு.. 2 அக்னி வீரர்கள் பலி.. ராகுல் காந்தி கண்டனம்..!

Siva
திங்கள், 14 அக்டோபர் 2024 (06:55 IST)
நாசிக் நகரில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில், பயிற்சி நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இரண்டு வெடிகுண்டுகள் வெடித்த நிலையில், இரண்டு அக்னி வீரர்கள் பலியானதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த பத்தாம் தேதி, பயிற்சி நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென வெடிகுண்டு வெடித்ததால் கோஹில் விசுவராஜு மற்றும் சாய் பாத் ஆகிய 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இரு அக்னி வீரர்கள் மரணமடைந்திருப்பது சோகமான சம்பவமாகும். அவர்களது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த சம்பவம் அக்னி வீரர்கள் திட்டம் குறித்து மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது, ஆனால் பாஜக அரசு வழக்கம் போல் பதில் அளிக்க தவறிவிட்டது. வீரமரணம் அடைந்த ராணுவ  இருவருக்கும், ராணுவ வீரர்களுக்கான இழப்பீட்டுக்கு இணையான இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பிற அரசு வசதிகள் ஏன் கிடைக்கவில்லை?

அக்னி திட்டம் ராணுவத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் நமது வீரர்கள், வீராங்கனைகளை தியாகத்தை அவமதிக்கும் செயல் என்றும் ராகுல் காந்தி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்