சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.. பாபா சித்திக் கொலைக்கு ராகுல் காந்தி கண்டனம்

Mahendran

ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (14:10 IST)
முன்னாள் மகாராஷ்டிரா அமைச்சர் பாபா சித்திக்  நேற்று படுகொலை செய்யப்பட்ட நிலையில் பாபா சித்திக் மறைவு அதிர்ச்சி மற்றும் வருத்தத்தை அளிக்கிறது என்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 
48 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்த பாபா சித்திக்  கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அஜித் பஹாரின் தேசியவாத கட்சிக்கு தாவினார். இந்த நிலையில் நேற்று அவர் தனது அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த போது மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
 
இந்த கொலைக்கு பாஜக அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: 
 
பாபா சித்திக்கின் மறைவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகாராஷ்டிராவில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதை இந்த கொடூர சம்பவம் அம்பலப்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர அரசாங்கம்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். நீதி வெல்ல வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்