ரயில் விபத்து: இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிந்தால் மத்திய அரசு கண் விழிக்கும்? - ராகுல் காந்தி ஆவேசம்!

Prasanth Karthick

சனி, 12 அக்டோபர் 2024 (10:09 IST)

கவரைப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்து குறித்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி மத்திய அரசை கண்டித்துள்ளார்.

 

 

சென்னையிலிருந்து புறப்பட்ட பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கவரைப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் 6 பெட்டிகள் தடம்புரண்ட நிலையில், ரயிலில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ரயில் பெட்டிகளை அகற்றி வழித்தடத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

 

இந்த விபத்து குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி “மைசூரு-தர்பங்கா ரயில் விபத்து, பாலாசூர் பயங்கர விபத்தை பிரதிபலிக்கிறது - பயணிகள் ரயில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியது.

 

பல விபத்துகளில் பல உயிர்கள் பலியாகியிருந்தாலும், பாடம் கற்கவில்லை. பொறுப்புக்கூறல் மேலே இருந்து தொடங்குகிறது. இந்த அரசு விழித்துக்கொள்ளும் முன் இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிக்கப்பட வேண்டும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்