பிரதமரை வரவேற்க செல்லாதது ஏன்? பஞ்சாப் முதல்வர் விளக்கம்!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (20:13 IST)
பிரதமரை வரவேற்க விமான நிலையம் செல்லாதது ஏன் என்பது குறித்து பஞ்சாப் முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். 
 
பஞ்சாப் மாநிலத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க சென்ற முதல்வர் போராட்டக்காரர்களின் போராட்டம் காரணமாக விழாவில் பங்கேற்காமல் திரும்பி விட்டார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தனது செயலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பிரதமரை வரவேற்க விமானநிலையத்துக்கு செல்லவில்லை என பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
மேலும் மோசமான வானிலை மற்றும் போராட்டக்காரர்களின் எதிர்ப்பு காரணமாக பஞ்சாப் பயணத்தை நிறுத்துமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டோம் என்றும் ஆனால் அவர்கள் திடீரென பாதையை மாற்றி வந்தார்கள் என்றும் அது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்றும் பிரதமரின் வருகையின் போது பாதுகாப்பில் எந்தவிதமான குறைபாடுகளும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பி அதற்கு தான் வருத்தம் அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்