இந்திய விமானங்களுக்கு தடை: ஹாங்காங் அரசு அதிரடி அறிவிப்பு!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (20:10 IST)
ஜனவரி 8 முதல் இந்தியா உள்பட 8 நாடுகளின் விமானங்கள் வருவதற்கு தடை விதிக்கப்படுவதாக ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் அதிகமாக பரவி வருவதை அடுத்து இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து விமானம் வருவதை தடை செய்து ஹாங்காங் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
இந்த நாடுகளுக்கு சென்றவர்கள் ஹாங்காங்கிற்கு திரும்பி வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்