சென்னை பெரம்பூர் ராஜீவ் காந்தி நகரில், கல்லூரி மாணவன் ஆகாஷ் தனது காதலியுடன் வீடு வாடகைக்கு எடுத்ததாகவும், தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்கிறோம் என்று வீட்டு ஓனரிடம் கூறியிருந்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், புதிய வீட்டிற்கு குடி வந்த ஒரே வாரத்தில் ஆகாஷ் மற்றும் அவருடைய காதலிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, காதலியை கொலை செய்துவிட்டதாக இருக்கிறது. அதனை அடுத்து, ஆகாஷ் தனது உயிரையும் மாய்த்துக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கணவன் மனைவி என்று கூறி வீடு வாடகைக்கு எடுத்து, ஒரே வாரத்தில் காதலியை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞரால், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.