புனே கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தாத்தா தீவிரவாதியுடன் தொடர்புடையவரா? அதிர்ச்சி தகவல்..!

Siva
வெள்ளி, 24 மே 2024 (07:33 IST)
புனேவில் கார் விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவனின் தாத்தா ஏற்கனவே ஒரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டவர் என்பதும் அவர் தீவிரவாதியுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் 17 வயது சிறுவன் மது போதையில் கார் ஓட்டிய நிலையில் இருசக்கர வாகனத்தில் மோதியதால் அந்த வாகனத்தில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

இதனை அடுத்து அந்த சிறுவன் கைது செய்யப்பட்ட நிலையில் சில மணி நேரங்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் சிறுவனுக்கு ஜாமீன் கொடுத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சிறுவனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சிறுவனின் தாத்தா சுரேந்திர அகர்வால் என்பவருக்கு துப்பாக்கி சூடு வழக்கு ஒன்றில் தொடர் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தில் தாதா சோட்டா ராஜனுக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த இந்த வழக்கு தற்போது கார் விபத்து மூலம் மீண்டும் தூசி தட்டப்பட்டிருப்பதாகவும் இந்த வழக்கு விசாரணை தீவிரமடைய இருப்பதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்