காட்டு பகுதியில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி-இந்து முன்னணி மாநில தலைவர் குற்றச்சாட்டு!

J.Durai

செவ்வாய், 14 மே 2024 (11:47 IST)
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தாராபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தேசிய அவர் கூறியதாவது....
 
மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசம் அடைந்துள்ளது.
 
கொலை, கொள்ளை, ஆக்கிரமிப்பு சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. காவல்துறையினர் மெத்தனப்போக்கே  இதற்கு காரணம். தமிழக கல்லூரிகளில் குச்சி மிட்டாய், சாக்லேட் ,என நூறு வடிவங்களில் போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாக விற்பனை ஆகிறது.
கல்லூரி மாணவிகளுக்கு இந்த போதை பழக்கம் ஏற்பட்டுள்ளது வருந்ததக்கது. 
 
உளவுப் பிரிவு போலீசார் மற்றும் லோக்கல் போலீசார் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்களுடன் நல்ல தொடர்பில் உள்ளனர்.
 
சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது .முதல்வருடன் போதைப் பொருள் விற்பனை மன்னன் ஜாபர் சாதிக் சர்வசாதாரணமாக போட்டோக்கு போஸ் கொடுத்ததும் போதைப் பொருள் விற்பனை அதிகரித்ததை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
 
தாராபுரம் கொண்டரசம்பாளையம் பகுதியில் ஒரு 40-ஏக்கர் நிலத்தில் சுமார் 50-ஆண்டுகளாக குத்தகைக்கு இருந்த குப்புசாமி கவுண்டர் குடும்பத்தினர் திருப்பூர்  சென்றிந்த போது ஆளுங்கட்சியை சேர்ந்த கும்பல் அத்துமீறி நுழைந்து பைப்புகளை உடைத்தும் வீட்டை சேதப்படுத்தியும் உள்ளனர். 
 
இது குறித்து போலீசில்  புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.உடனடியாக விசாரணை செய்து போலீசார்நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 
இல்லையெனில் விரைவில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் இவ்வாறு காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்