பிரியங்கா ரெட்டி கொலையாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை: பெரும் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 6 டிசம்பர் 2019 (07:54 IST)
ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி என்பவர் 4 கொடூரமான கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
சமீபத்தில் பாராளுமன்றத்தில் பேசிய பெண் எம்பிகள் குற்றவாளிகள் நான்கு பேரையும் சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும், இந்த மாதத்திற்குள் அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு தூக்கில் தொங்கவிட வேண்டும் என்றும் ஆவேசமாக பேசினர் 
 
கனிமொழி உள்பட ஒருசில எம்பிக்கள் மட்டுமே சட்டப்படி அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும் என்று கூறினர். ஆனால் பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வழக்கில் பாலியல் பலாத்கார குற்றவாளிகளை உடனடியாக கொல்ல வேண்டும் என்று கருத்து தெரிவித்து வந்தனர். சமூக வலைதளங்களிலும் இதே கருத்தில் இருந்து வந்தது 
 
இந்த நிலையில் ஐதராபாத்தில் கால்நடை மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 4 பேர்களும் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக சற்றுமுன் செய்திகள் வெளிவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு 4 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்த முயற்சி மேற்கொண்ட போது அவர்கள் 4 பேரும் தப்பிச் செல்ல முயற்சி செய்ததாகவும், இதனை அடுத்து அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது
 
பிரியங்கா ரெட்டியை கொலை செய்த 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு சமூக வலைத்தள பயனாளிகள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்