100-க்கு போன் போடாம தங்கச்சிக்கு போன் போட்டா... அமைச்சரின் ஆணவ பேச்சு

சனி, 30 நவம்பர் 2019 (15:44 IST)
ஐதராபாத் கால்நடை மருத்துவர் சகோதரியை தொடர்பு கொண்டதற்கு பதில் காவல்துறையின் 100 எண்ணை தொடர்பு கொண்டிருந்தால் உயிரோடு இருந்திருப்பார் என அமைச்சர் ஒருவர் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஐதராபாத்தில் கால்நடை பெண் டாக்டர் ஒருவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அமைச்சர் முகம்மத் மக்மூத் அலி கருத்து தெரிவித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, ஐதராபாத் அருகே எரித்து கொல்லப்பட்ட பெண் மருத்துவர், ஆபத்து காலத்தில் சகோதரியை தொடர்பு கொண்டதற்கு பதில் காவல்துறையின் 100 எண்ணை தொடர்பு கொண்டிருந்தால் உயிரோடு இருந்திருப்பார் என பேசியுள்ளார். 
 
அவரின் இந்த கருத்து கண்டனங்களுக்குள்ளான நிலையில், பெண் மருத்துவரின் குடும்பத்தினரது உணர்வுகளை காயப்படுத்துவது தமது நோக்கமில்லை என்று வருந்தி விளக்கமளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்