தனியார் வாகனங்களில் செல்ல பள்ளி மாணவ மாணவிகளுக்கு தடை: டெல்லி அரசு உத்தரவு

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (21:27 IST)
பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி டெல்லி அரசு தனியார் வாகனங்களில் பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து செல்ல தடை விதித்துள்ளது.


 

 
டெல்லியில் கடந்த 2 நாட்களுக்கு முன் 3 வயது சிறுவன், பள்ளியில் இருந்து வீடு திரும்பிய போது பள்ளி வேன் மோதி உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய ஓட்டுரை போலீசார் கைது செய்தனர். 
 
இந்நிலையில் இது போன்ற விபத்துகள் இனி நிகழாமல் இருக்க டெல்லி அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
தனியார் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளை அழைத்து செல்ல பள்ளி சார்பாக பள்ளி வேன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தனியார் வாகனங்களை பள்ளிகளுக்கு பயன்படுத்த கூடாது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்