அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது.. அண்ணாமலை அறிவிப்பு..!

Mahendran

சனி, 1 மார்ச் 2025 (17:15 IST)
முதலமைச்சர் முக ஸ்டாலின்  தலைமையில் மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
இந்த கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை என்பதற்கான காரணங்களையும், அவர் முதலமைச்சருக்கு கடிதம் மூலம் எழுதி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மார்ச் 5ஆம் தேதி தமிழக முழுவதும் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
தொகுதி மறு வரையறை விகிதச்சார அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகள் குறைக்கப்படாது என அமைச்சர் அமித்ஷா கூறியுள்ள போதிலும், இந்த அனைத்து கட்சி கூட்டம் ஒரு நாடகம் என்றும், இந்தி திணிப்பு நாடகத்தை மக்கள் ஏற்க மறுத்ததால் வேண்டுமென்றே வேறொரு பிரச்சனையை முதல்வர் கையில் எடுத்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
மேலும், மத்திய அரசு நிதி அளிக்கவில்லை என இன்னும் எவ்வளவு காலம் தான் பொய்களை பரப்ப முடியும் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்