கேரள மாநிலம் வயநாட்டில் சஜி ஜோசப் என்ற பாதிரியார் சிறுவர்களை தன்னுடைய பாலியல் தேவைக்காக துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த அவர் தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் மீனாங்குடியில் குழந்தைகள் இல்லம் ஒன்று உள்ளது. இந்த குழந்தைகள் இல்லத்தை சஜி ஜோசப் என்ற பாதிரியார் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் அவர் அங்கு உள்ள 14 வயதான சிறுவர்கள் மூலம் பாலியல் சுகம் அடைந்து வந்துள்ளார்.
தன்னுடைய பாலியல் சுகத்துக்காக மைனர் சிறுவர்களை பாதிரியார் சஜி ஜோசப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியிருக்கிறார். இதனை கடந்த 2 வருடமாக அவர் செய்து வந்துள்ளார். இந்த சம்பவம் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மூலம் அவர்களது பெற்றோர்களுக்கு தெரியவர அவர்கள் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் புகார் அளித்துள்ளனர்.
இதன் பின்னர் பாதிரியார் சஜி ஜோசப் மீது பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 9 மற்றும் 10, சிறுவர் நீதி சட்டம் பிரிவு 75 ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கு பதிவு செய்துள்ளதால் கர்நாடக மாநிலம் மங்களூருவில் தலைமறைவாக இருந்தார் பாதிரியார் சஜி ஜோசப்.
இந்நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இதனையடுத்து 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார் சஜி ஜோசப்.