மேகாலயாவில் மோசமான வானிலை காரணமாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்ற ஹெலிகாப்டர் 4 மணி நேரத்திற்கு மேலாக சிக்கிக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக மேகாலயா சென்றுள்ளார். ஷில்லாங்கில் இருந்து அசாமில் உள்ள திபுவுக்கு காலை 10 மணிக்குப் புறப்படத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், மோசமான வானிலை காரணமாக சரியான நேரத்தில் விமானம் புறப்பட முடியாமல் 4 மணி நேரம் தாமதமாகி பிற்பகல் 2.35-க்கு புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.