நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட டெல்லி நிர்வாக மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்..!

Webdunia
ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (10:50 IST)
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் எதிரி கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்ட டெல்லி நிர்வாக மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.  
 
டெல்லி மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் இருந்து வருகிறது. குறிப்பாக டெல்லி அரசின் அதிகாரிகளை நியமனம் செய்வது மற்றும் இடமாற்றம் செய்யும் அதிகாரம் யாருக்கு என்ற மோதல் முற்றியது. 
 
இந்த நிலையில்  அதிகாரிகளை நியமனம் செய்வது மற்றும் இடமாற்றம் செய்வது டெல்லி மாநில அரசுக்கே உரிமை என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது 
 
இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி  அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் கவர்னருக்கே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 
 
இந்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இந்த நிலையில் தற்போது இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்