இதில், "பிஎம் ஸ்ரீ மற்றும் சமக்ர சிக்ஷா திட்டங்களின் கீழ் மாநிலத்துக்கு வழங்க வேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளதை சட்டவிரோதமானது," என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் கல்வி மேம்பாட்டு பணிகளில் பெரும் இடையூறாக உள்ளது என்பதும், அந்த நிதியை உடனடியாக விடுவிக்க உத்தரவு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாததற்காக நிதி வழங்கப்படாமல் இருப்பது ஒரு ஒழுங்கற்ற நடவடிக்கையாகவும், அரசியல் அடிப்படையில் மாநிலத்தை தண்டிப்பதற்கான முறையாகவும் விளக்கப்பட்டுள்ளது.