மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி!!

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (17:37 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. 
 
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் கூட இரு கட்சிகளிடையே ஆட்சியை பங்கிட்டு கொள்வதில் மோதல் ஏற்பட்டதால் கூட்டணி பிளவுப்பட்டது.
 
இந்நிலையில் ஆளுனர் பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தும் அவர்கள் மறுத்து விட்டார்கள். இதனால் சிவசேனாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுனர். இதனால் சிவசேனா – தேசியவாத காங்கிரஸிடம் கூட்டணி அமைக்க முயற்சித்தது. 
 
நேற்று மாலை ஆளுனரை சந்தித்த சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் எழுந்தது. உத்தவ் தாக்கரே கோரிய 3 நாள் கெடுவை ஆளுனர் கொடுக்க மறுத்ததால் சிவசேனா ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
 
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸிடமும் ஆளுனர் பேச்சு வார்த்தை நடத்தினார். அவர்களை இன்று இரவு 8 மணிக்குள் ஆதரவு கடிதங்களை சமர்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில் மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு ஆளுனர் பகத்சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்திருந்தார். 
 
இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் மத்திய அமைச்சரவையின் பரிந்துரை கடிதத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகம்  அனுப்பியது. 
 
தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். எனவே, மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்