நடிகை பூனம் பாண்டே தான் இறந்து விட்டதாக பொய் செய்தியை சமூக வலைத்தளத்தில் பரப்பிய நிலையில் அவர் மீது வழக்கு தொடர்ந்தால் அவருக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
நடிகை பூனம் பாண்டே நேற்று முன்தினம் தனது மேலாளர் மூலம் தான் கர்ப்பப்பை வாய்புற்று நோய் காரணமாக இறந்து விட்டதாக அறிவித்திருந்தார்/ அதன் பிறகு மறுநாள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இவ்வாறு செய்தேன் என்று அவர் ஒரு வீடியோவை வெளியிட்டார்
இந்த நிலையில் கடந்த 2000 ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67 படி சமூக வலைதளங்களில் தவறான செய்தியை பரப்பினால் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அதேபோல் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை ஆபராதம் விதிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
எனவே பூனம் பாண்டே மீது இந்த பிரிவுகளில் யாராவது வழக்கு தொடர்ந்தால் அவருக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது,.