அந்த நாட்டின் அரசு ரகசியங்களை கசியவிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த வழக்கில் ஜாமின் கோரி இம்ரான் கான் தரப்பிலும், இதே வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரோஷி சார்பிலும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அரசின் ரகசியங்களை கசியவிட்டதற்காக நேற்று இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு ஊழல் வழக்கில் அவர்கள் இருவருக்கும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.