உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி.. போரை நிறுத்த முயற்சியா?

Siva
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (07:22 IST)
பிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி உக்ரைன்  நாட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

ரஷ்யா மற்றும் உக்ரைன்  நாடுகளின் போர் தொடங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆகி உள்ள நிலையில் இந்த போரை நிறுத்த பல நாடுகள் முயற்சித்து வருகிறது.  குறிப்பாக இந்தியாவால் மட்டுமே இந்த போரை நிறுத்த முடியும் என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா மற்றும் உக்ரைன்  ஆகிய இரண்டு நாடுகளின் பிரதமர்களுக்கும் நண்பர் என்பதால் அவர் பேச்சுவார்த்தை நடத்தி இந்த போரை நிறுத்த முயற்சி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் ஆகஸ்ட் 23ஆம் தேதி பிரதமர் மோடி உக்ரைன்  நாட்டிற்கு செல்ல உள்ளார் என்பதும் ரஷ்யா - உக்ரைன்  போர் தொடங்கியதற்கு பின்னர் முதல் முறையாக அவர் அரசு முறை பயணமாக செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 21 ஆம் தேதி போலந்து நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி அதன் பின்னர் அங்கிருந்து 23ஆம் தேதி உக்ரைன்  நாட்டிற்கு செல்கிறார் என்றும் அங்கு போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன்  பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் இதன் மூலம் ரஷ்யா - உக்ரைன்  போர் முடிவுக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்