உத்தரபிரதேசம் வளர்ந்தால் நாடு வளரும்: பிரதமர் மோடி!

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (16:11 IST)
உத்தரபிரதேசம் வளர்ச்சி அடையும்போது நாடும் வளர்ச்சி அடையும் என பிரதமர் மோடி கூறியுள்ளார் 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநிலத்தை நோக்கி அரசியல் கட்சி தலைவர்கள் படையெடுத்து வருகின்றனர்.
 
அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கங்கை விரைவுச்சாலை அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி அவர்கள் உத்தரபிரதேச முழுவதுமாக வளர்ச்சி அடையும்போது நாடும் வளர்ச்சி அடையும் என்றும் எனவே அரசின் கவனம் உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சியில் தான் அதிகம் உள்ளது என்றும் தெரிவித்தார் 
 
இந்திய நாட்டின் அதி நவீன மாநிலமான உத்தரப் பிரதேசம் மறு சீரமைக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். உத்தரப்பிரதேசம் வளர்ச்சி அடையும்போது நாடும் வளரும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்