தமிழகம் வரும் பிரதமர் மோடி!

சனி, 18 டிசம்பர் 2021 (12:27 IST)
தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க பிரதமர் மோடி சென்னை வருகை தர உள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

 
ஆம், தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க ஜனவரி 12 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை தர உள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
 
அதன்படி விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி தொடங்கிவைக்க உள்ளார். விருதுநகரில் பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்