தூய்மை இந்தியா திட்டம்: தமிழக அரசுக்கு தேசிய விருது

Webdunia
புதன், 2 அக்டோபர் 2019 (21:51 IST)
ஊரக அளவில் தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. தமிழகத்திற்கான விருதை அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் வேலுமணியிடம் பிரதமர் மோடி வழங்கினார்

மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றதும் ‘தூய்மை இந்தியா’ என்ற திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார். இந்த திட்டத்தின்படி பிரதமர் முதல் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.க்கள் ஆகியோர் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தினர். இந்த திட்டத்திற்காக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அம்பாசிடம் பதவி கொடுக்கப்பட்டது

இந்த நிலையில் இன்று அகமதாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சென்றார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் இந்திய அளவில் தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக ஊரக அளவில் செயல்படுத்திய மாநிலம் தமிழகம் என தேர்வு செய்யப்பட்ட நிலையில் தமிழக ஊரகத்துறை அமைச்சர் வேலுமணியிடம் அதற்கான விருதை பிரதமர் மோடி அளித்தார். மேலும் அதே மேடையில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி, காந்தியின் நினைவாக ரூ150 மதிப்பிலான நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்