பிஎஃப்ஐ நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை! – கேரளாவில் முழு அடைப்பு போராட்டம்!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (08:39 IST)
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை நடத்திய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கேரளாவில் முழு அடைப்பு நடத்தப்படுகிறது.

சமீபத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல், தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதை தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பு இந்தியா முழுவதும் 10 மாநிலங்களில் பி.எப்.ஐ அமைப்பின் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

ALSO READ: 22 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் தலைவர் தேர்தல்: நாளை முதல் வேட்புமனு தாக்கல்

நேற்று கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பிஎப்ஐ நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் பிஎப்ஐ பிரமுகர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ஐஏவின் இந்த சோதனை கேரளாவில் கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை கண்டித்து இன்று கேரளாவில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடத்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்