ஆந்திரா துணை முதல்வராக பவன் கல்யாண் நியமனம்..!

Senthil Velan
புதன், 12 ஜூன் 2024 (15:49 IST)
ஆந்திராவின் துணை முதல்வராக ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் நியமிக்கப்பட்டுள்ளார்.

175 தொகுதிகளைக் கொண்ட ஆந்திரமாநில சட்டமன்ற தேர்தலில் 164 தொகுதிகளில் வெற்றிபெற்று ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கூட்டணி வீழ்த்தி அமோக வெற்றி பெற்றது.
 
தெலுங்கு தேசம் கூட்டணியில் பாஜகவும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இடம்பெற்றிருந்தது. ஆந்திராவில் இரண்டாவது பெரிய கட்சியாக பவன் கல்யாணி ஜனசேனா உருவெடுத்துள்ளது.

ALSO READ: எடப்பாடியால் தான் அதிமுகவுக்கு அழிவு..! டிடிவி தினகரன் காட்டம்..!!
 
இதனிடையே கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள கேசரபள்ளி ஐ.டி. பூங்கா அருகே நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.  ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் ஆந்திராவின் துணை முதல்வராக பவன் கல்யாண் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்