4வது முறையாக முதல்வராக பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு. சிறப்பு விருந்தினர்கள் யார் யார்?

Siva

புதன், 12 ஜூன் 2024 (07:26 IST)
ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்க இருக்கிறார். அவர் ஏற்கனவே ஆந்திர மாநில முதல்வராக 3 முறை பொறுப்பேற்ற நிலையில் இன்று அவர் 4வது முறையாக பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்று காலை 11.27 மணிக்கு சந்திரபாபு நாயுடுவுக்கு ஆளுநர் அப்துல் நசீர்  பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ஜேபி நட்டா,  அமித்ஷா உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்களும் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆந்திர மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம்,  பவன் கல்யாண் ஜனசேனா மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும் ஜனசேனா 21 இடங்களிலும் பாஜக எட்டு இடங்களிலும் வெற்றி பெற்றது என்பதும், ஜெகன்மோகன் ரெட்டியின்  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்