ஆந்திராவில் 175 சட்டசபை, 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. எதிர்க்கட்சியான சந்திரபாபுநாயுடுவின் தெலுங்கு தேசம், பாஜக, நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
இதில் சந்திரபாபு, பவன்கல்யாண், பாஜக கூட்டணி மொத்தம் 164 இடங்களில் வெற்றி பெற்றது. பவன்கல்யாண் கட்சி 21 இடங்களில் வென்று ஆந்திராவில் 2வது பெரிய கட்சியாக உருவானது. 135 தொகுதிகளில் வெற்றி பெற்ற சந்திரபாபுநாயுடு ஆட்சியை கைப்பற்றினார். பாஜக 4 இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால் ஆளும் கட்சியாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 17 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது.
பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் பல மாநில முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், திரைபிரபலங்கள் பங்கேற்றனர்.