இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் புதிய நாடாளுமன்றம் கட்டும் பணிகளை நிறுத்தி வைக்க பிரதமருக்கு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரித்துள்ளனர். தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில் டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. 1000 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் இல்லமும் கட்டப்பட உள்ளது.
இந்நிலையில் தற்போதைய கொரோனா பெருந்தொற்று நிலையில் நாடாளுமன்ற கட்டிட பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், நாடு முழுவது இலவச தடுப்பூசி முகாம்களை நடத்திட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம் அளித்துள்ளனர்.